டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் 25-ம் தேதி கூடுகிறது


டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் 25-ம் தேதி கூடுகிறது
x
தினத்தந்தி 13 Jun 2019 9:43 PM IST (Updated: 13 Jun 2019 9:43 PM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் வருகிற 25-ம் தேதி கூடுகிறது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது.  தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கும் தங்கள் தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன. காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 3 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த மாதம் 28–ந் தேதி கூடியது. அப்போது குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு ஜூன் மாதம் 9.2 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ஆனால் வழக்கம்போல் அந்த உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் தண்ணீர் திறக்கப்படாதது குறித்து விவாதிக்க வேண்டும் என தமிழக அரசு வற்புறுத்தியதை தொடர்ந்து வருகிற 25–ந் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகம் தரப்பில் மீண்டும் தண்ணீர் திறக்க வலியுறுத்தப்படலாம்,  கர்நாடகத்துக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story