உத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் பலியாகினர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் புழுதிப்புயல் வீசியது. சித்தார்த்தா நகர் மாவட்டத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. புழுதிப்புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சித்தார்த்தா நகர் மாவட்டத்தில் 4 பேரும் அதை தொடர்ந்து தேவ்ரியா மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர்.
22 கால்நடைகள் உயிரிழந்தன. 93 வீடுகளும் சேதம் அடைந்தன. புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்ததற்கு உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். ரூ.4 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இதனிடையே, உத்தர பிரதேசத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை புழுதிப்புயல் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் தேதிக்கு பிறகு உத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தொடர்பான சம்பவங்களில், இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story