தேசிய செய்திகள்

பீகாரில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு + "||" + Bihar hot summer death toll rises to 61

பீகாரில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

பீகாரில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
பீகாரில் வெயில் காரணமாக பலியானோர் எண்ணிக்கை தற்போது 61 ஆக உயர்ந்துள்ளது.
பாட்னா,

பீகார் மாநிலத்தில் வெயில் கொளுத்துகிறது. பாட்னா, கயா, பாகல்பூர் நகரங்களில் நேற்று 115 டிகிரி வெயிலுடன் அனல்காற்று வீசியது. பீகாரில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் 30 பேரும், கயா மாவட்டத்தில் 20 பேரும், நவடா மாவட்டத்தில் 11 பேரும் உயிரிழந்து இருக்கிறார்கள். வெயிலால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


வெயில் காரணமாக உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.

வெயில் காரணமாக பாட்னா நகரில் கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டு இருந்தது. வெயிலின் தாக்கம் குறையாததால் தொடர்ந்து வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) வரை அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.