17-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்பு
17-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றுக்கொண்டார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றது.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 31-ந் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ந் தேதி கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) 17-வது நாடாளுமன்ற மக்களவை முதல் முறையாக கூடுகிறது. முன்னதாக, இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இன்றும், நாளையும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள பாரதீய ஜனதா கட்சி மூத்த எம்.பி. வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். 19-ந் தேதி புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story