2022 உ.பி. தேர்தலுக்காக அடிமட்ட அளவில் பணியாற்ற பிரியங்கா காந்தி திட்டம்


2022 உ.பி. தேர்தலுக்காக அடிமட்ட அளவில் பணியாற்ற பிரியங்கா காந்தி திட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2019 3:03 PM IST (Updated: 17 Jun 2019 3:03 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் பிரியங்கா காந்தி புதிய திட்டத்தை தீட்டியுள்ளார்.

2019 தேர்தலில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி நேரடி அரசியலில் களம் இறக்கப்பட்டார். உ.பி. மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். கிழக்கு உத்தரபிரதேசத்தில் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால்  சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட அமேதியில் தோல்வி அடைந்தார். 

தேர்தலுக்கு முன்னரே பிரியங்கா காந்தி 2022 தேர்தல்தான் இலக்கு என்பது போன்ற தோனியில் பேசியிருந்தார். இப்போது 2022 உ.பி. சட்டசபைத் தேர்தலுக்கு காங்கிரசை பலத்துடன் களமிறக்கும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி வாரம் 2 முறை மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மாநிலத்தில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து தொடர்பை பலப்படுத்த பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளதாக  கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன் மூலம் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி கொள்ள முடியும், அவர்களுடைய தேவைகள், பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில் 2022 தேர்தலுக்கான  வியூகம் வகுக்கலாம் என பிரியங்கா காந்தி நம்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். 

Next Story