சோனியா காந்தி இல்லத்தில் நாளை காங்கிரஸ் நாடாளுமன்ற உயர்மட்ட குழு கூட்டம் கூடுகிறது
சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உயர்மட்ட குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் 17வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி.க்களாக இடைக்கால சபாநாயகர் வீரேந்திரநாத் குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இன்று எம்.பி.யாக பதவியேற்று கொண்டனர்.
டெல்லியில் வருகிற 19ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் அங்கம் வகிக்கிற அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமை வகிப்பார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி விவாதிக்கப்படும்.
இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உயர்மட்ட குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story