தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு: தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
புதுடெல்லி,
17-வது மக்களவையின் முதற்கூட்டம் நேற்று கூடியது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 2-வது நாளாக இன்றும் எம்.பி.க்கள் பதவியேற்று வருகின்றனர்.
இன்று தமிழகத்தைச்சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், அரக்கோணம் தொகுதி எம்.பி. ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story