நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு


நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு
x
தினத்தந்தி 18 Jun 2019 6:58 PM IST (Updated: 18 Jun 2019 6:58 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் 17வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது.  கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி.க்களாக இடைக்கால சபாநாயகர் வீரேந்திரநாத் குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் எம்.பி.யாக பதவியேற்று கொண்டனர்.

நாடாளுமன்றத்திற்கு தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 2வது நாளாக நடந்தது. நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்று கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. சார்பில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் டி. ராஜா மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

Next Story