பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நன்றி
பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இன்று 49-வது பிறந்தநாள். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, “ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலம், நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அவரை ஆசிர்வதிக்கட்டும்” என்று டுவிட்டரில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து இருந்தார். பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருந்த பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி நன்றி தெரிவித்து பதில் டுவிட் செய்துள்ளார்.
ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி #IAmRahulGandhi மற்றும் #HappyBirthdayRahulGandhi என்கிற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவுக்கு ராகுல் காந்தி எப்படியெல்லாம் முன்னுதாரணமாக இருந்துள்ளார்” என்று வாசகத்துடன் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story