தேசிய செய்திகள்

சாலையோரம் பதுங்கி இருந்து வருவோரை முட்டி மோதிய காளை; வைரலாகும் வீடியோ + "||" + Gujarat: Two people injured after being attacked by a bull near Rajkot

சாலையோரம் பதுங்கி இருந்து வருவோரை முட்டி மோதிய காளை; வைரலாகும் வீடியோ

சாலையோரம் பதுங்கி இருந்து வருவோரை முட்டி மோதிய காளை; வைரலாகும் வீடியோ
குஜராத்தில் சாலையோரம் பதுங்கி இருந்து அங்கு வருவோரை காளை ஒன்று முட்டி மோதிய வீடியோ வைரலாகிறது.
ராஜ்கோட்,

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் சாலையோரம் மின்கம்பம் அருகே ஒன்றுமறியாதது போல் காளை ஒன்று நின்று கொண்டிருந்தது.  அந்த வழியே ஒருவர் சைக்கிளை மெல்ல ஓட்டி வந்துள்ளார்.  அவரை, மறைந்திருந்த காளை திடீரென வேகமுடன் ஓடி வந்து மோதி கீழே தள்ளி விட்டது.  பின்னர் மீண்டும் மின்கம்பம் அருகே சென்று நின்று கொண்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சைக்கிளில் வந்தவர் மெல்ல எழுந்து நின்றுள்ளார்.  அவரை சற்று தொலைவில் இருந்த வீட்டின் உரிமையாளர் இங்கு வரும்படி அழைத்துள்ளார்.  ஆனால் அந்த நபர் அங்கிருந்து செல்லாமல் காளையை நோக்கி ஏதோ கூறியபடி நின்றுள்ளார்.  ஆத்திரமடைந்த அந்த காளை மீண்டும் ஓடி வந்து அவரை முட்டி வீசியது.

இதில் அவர் பலத்த காயமுற்றார்.  பின் வீட்டின் உரிமையாளர் தண்ணீரை ஊற்றி காளையை விரட்டி விட்டார்.  இதன்பின் காயமடைந்த நபரை மெதுவாக இழுத்து கொண்டு வீட்டிற்குள் செல்கிறார்.  அங்கிருந்து ஓடிய காளை மின்கம்பம் அருகே நின்று கொண்டது.

சற்று நேரம் கழித்து மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியே வந்துள்ளார்.  அவரையும் திடீரென ஓடி வந்து காளை முட்டி மோதியது.  இதில் இருவரும் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு பின்பு அந்த காளை கோசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ
சிறுமியின் நெற்றியில் பைத்தான் வகை பாம்பு முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
2. மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஆம்புலன்சிற்கு வழி ஏற்படுத்திய பொது மக்கள்- வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிராவில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கொண்டு செல்லும் போது ஆம்புலன்சிற்கு பொதுமக்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
3. யார் லஞ்சம் வாங்குவது என்பதில் போலீசார் இடையே சண்டை; வைரலான வீடியோ
யார் லஞ்சம் வாங்குவது என்பதில் 2 போலீசார் சண்டை போட்டு கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.
4. ஈரானிடம் பிடிபட்ட இங்கிலாந்து கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ
ஈரானிடம் பிடிபட்ட இங்கிலாந்து கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
5. வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோ; திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டது
வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...