49-வது பிறந்த நாள்: ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து
49-வது பிறந்த நாளை கொண்டாடிய ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நேற்று 49-வது பிறந்த நாள் ஆகும். இதை அவர், டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களுடன் கொண்டாடினார். இதில் கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பிறந்த நாள் கொண்டாடிய ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி மற்றும் ஏராளமான தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும்’ என்று கூறியிருந்தார்.
பிரதமரின் வாழ்த்துக்கு ராகுல் காந்தி டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்தார்.
மன்மோகன் சிங், பிரியங்கா
மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, இமாசல பிரதேச முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங், அவரது மனைவியும், முன்னாள் எம்.பி.யுமான பிரதிபா சிங், மகனும், மாநில எம்.எல்.ஏ.வுமான விக்ரமாதித்யா ஆகியோரும் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.
பஞ்சாப் மாநில முதல்- மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான அம்ரீந்தர் சிங், ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறும்போது, ‘அன்பான ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கடந்த ஆண்டுகளில் நீங்கள் அடைந்துள்ள வளர்ச்சியால் பெருமிதம் அடைகிறேன். என் இனிய நண்பர் ராஜீவ் காந்தியை உங்களில் பார்க்கிறேன். நலம் மற்றும் வளமான நீண்ட வாழ்வை கடவுள் உங்களுக்கு அருளட்டும்’ என்று கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி
இதைப்போல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார்.

Related Tags :
Next Story