உ.பி.யில் கால்வாயில் வேன் கவிழ்ந்து விபத்து: 7 குழந்தைகள் பலியாகி இருக்கலாம் என அச்சம்


உ.பி.யில் கால்வாயில் வேன் கவிழ்ந்து விபத்து: 7 குழந்தைகள் பலியாகி இருக்கலாம் என அச்சம்
x
தினத்தந்தி 20 Jun 2019 1:39 PM IST (Updated: 20 Jun 2019 1:39 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் கால்வாயில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பத்வா கேதா கிராமத்தைச் சேர்ந்த 29 பேர் வேனில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தனர்.  அதிகாலை 3 மணியளவில் நக்ராம் என்ற இடம் அருகே  வேன் சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்தது. 

இந்த கோர விபத்தில் சிக்கிய பயணிகள் அபாயக்குரல் எழுப்பினர்.  இதையறிந்த கிராம மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினரும் கால்வாயில் இறங்கி தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

எனினும் வேனில் பயணம் செய்த 7 குழந்தைகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதாக தெரிகிறது.  மாயமான குழந்தைகள் 5 முதல் 10 வயது உடையவர்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

Next Story