சந்திரபாபு நாயுடுவுக்கு புதிய தலைவலி... பா.ஜனதாவிற்கு தாவ மாநிலங்களவை எம்.பி.க்கள் முடிவு என தகவல்
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜனதாவில் சேர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தோல்வியை தழுவியது. நாடாளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே தெலுங்குதேசம் வென்றது. மாநிலத்தில் ஆட்சியை இழந்தததுடன், நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையும் குறைந்தது. தற்போது சந்திரபாபு நாயுடு வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவருடைய கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 4 பேர் பா.ஜனதாவில் இணைய உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவையில் இப்போது தெலுங்கு தேசம் கட்சிக்கு 6 எம்.பி.க்கள் உள்ளனர். அதில் 4 எம்.பி.க்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை பெற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசிய எம்.பி.க்கள் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டத்தை நடத்தியுள்ளனர் என்றும், அவர்கள் மொத்தமாக கட்சியிலிருந்து விலகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story