இந்தியா தோல்வி அடைய புது ஜெர்சியே காரணம்: மெகபூபா முப்தி சொல்கிறார்
இந்தியா தோல்வி அடைய ஆரஞ்சு நிற ஜெர்சியே காரணம் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பர்மிங்காமில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து விளையாடியது.
இந்தப்போட்டியில், இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வி குறித்து பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு காரணங்களை கூறி இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி, இந்திய அணி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இப்படி கூறுவது எனது மூடநம்பிக்கை என்றே கூறுங்கள். ஆனால், இந்திய அணி உலக கோப்பையில் தோல்வி அடைய காரணம் புதிய ஜெர்சிதான்’ என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story