ஹைட்ரோ கார்பன் திட்டம்: பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய மந்திரி அழைப்பு


ஹைட்ரோ கார்பன் திட்டம்: பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய மந்திரி அழைப்பு
x
தினத்தந்தி 2 July 2019 3:45 AM IST (Updated: 2 July 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நேற்று டெல்டா விவசாயிகள் பிரச்சினை குறித்து தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில், “காவிரி டெல்டா பகுதியில் 341 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்காக துளை இடுகிறீர்கள். மத்திய அரசின் இந்த செயல்பாடு விதிமுறைகளுக்கு மாறானது மட்டுமின்றி சட்ட விரோதமானதும் ஆகும். இதை தடுத்து நிறுத்த, எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களை திரட்டி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என்றார்.

அதற்கு பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதில் அளிக்கையில், “டெல்டாவில் நடைபெறும் அனைத்து பணிகளும் இப்போதுதான் நடப்பது போல கருதக்கூடாது. இது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வு. காவிரி படுகையில் எண்ணெய் எடுக்கும் விவகாரத்தில் நீங்களும் (தி.மு.க.) தமிழக அரசும் ஒரே கருத்தைத்தான் கொண்டிருக்கிறீர்கள். மத்திய அரசு யார் மீதும் எதையும் திணிக்காது. தமிழகத்தின் மூத்த தலைவர்கள் அனைவரும் வாருங்கள். இதுபற்றி விவாதிப்போம்” என்றார்.


Next Story