மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 12 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்
மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் பலியாகினர்.
மும்பை,
மும்பை கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் உள்ள பிம்ப்ரிபடா என்ற இடத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 12 பேர் பலியாகினர். 13 பேர் காயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், தொடர்ந்து மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story