மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம்
மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் விலகிச்சென்றது.
மும்பை,
மும்பை கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஜெய்பூரில் இருந்து நேற்று இரவு 11.45 மணியளவில் மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்றது.
கனமழையால் ஏற்பட்ட ஓடுபாதையில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச்சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பை வரவேண்டிய விமானங்கள் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டன.
Related Tags :
Next Story