காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்ட சிறையை கண்காணித்த சீன ஆளில்லா விமானம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையை சீன ஆளில்லா விமானம் கண்காணித்தது தெரியவந்துள்ளது.
கிஷ்த்வாரில் உள்ள மாவட்ட சிறை மிகவும் பாதுகாப்பு நிறைந்தது. ராணுவ நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட முக்கிய பயங்கரவாதிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். 25 முக்கிய பயங்கரவாதிகள் உள்பட 101 பேர் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். அச்சிறையை கேமராக்கள் பொருத்தப்பட்ட சீன ஆளில்லா விமானம் கண்காணித்துள்ளது. இந்த விமானத்தின் நகர்வை அடுத்து காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்துள்ளனர். கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் சிறையை கண்காணித்தது இதுவே முதல்முறை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் கண்காணிப்பு கோபுரங்களில் ஒன்று மீது விமானம் நேற்று மாலை 5.35 மணியளவில் மோதி கீழே விழுந்துள்ளது. கோபுரங்களில் நிறுத்தப்பட்டிருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்து சிறை மூத்த அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சென்று ஆய்வு செய்ததில் அது சிறிய அளவிலான ஆளில்லா விமானம் என்றும் ஆனால் அதில் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது, என்றார்.
Related Tags :
Next Story