காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம்


காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம்
x
தினத்தந்தி 3 July 2019 4:27 PM IST (Updated: 3 July 2019 4:27 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள்.  ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே நான் கொடுத்து விட்டதால் நான் தலைவராக இல்லை. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு காங்கிரஸ் தலைவர் தேர்ந்து எடுக்கப்படவேண்டும் என ராகுல்காந்தி  கூறினார்.

இந்த நிலையில், 90 வயதான மோதிலால் வோரா காங்கிரஸ் இடைக்கால தலைவராக நியமனம்  செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் இடைக்கால தலைவராகியுள்ள மோதிலால் வோரா மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தவர் ஆவார்.

Next Story