“காங்கிரஸ் கட்சியின் புதிய நாடகம்” - ராகுல் காந்தி ராஜினாமா பற்றி பா.ஜனதா கருத்து


“காங்கிரஸ் கட்சியின் புதிய நாடகம்” - ராகுல் காந்தி ராஜினாமா பற்றி பா.ஜனதா கருத்து
x
தினத்தந்தி 4 July 2019 12:17 AM IST (Updated: 4 July 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியின் புதிய நாடகம் என ராகுல் காந்தி ராஜினாமா பற்றி பா.ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தது பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வியிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அப்போது அவர் கூறுகையில், பழமையான காங்கிரஸ் கட்சியின் புதிய நாடகம் இது என்றும், இதில் தாங்கள் சொல்வதற்கு ஒன்று இல்லை என்றும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி பதவி விலகியது பற்றி, அமேதி தொகுதியில் அவரை தோற்கடித்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கருத்து கேட்ட போது, “ஜெய்ஸ்ரீ ராம்” என்று மட்டும் கூறினார்.

பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் நளின் கோக்லி கூறுகையில், காங்கிரஸ் ஒரு குடும்ப கட்சி என்றும், தங்கள் கட்சி ஜனநாயக ரீதியில் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

Next Story