வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு தடை விதிக்கும் மசோதா - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கான தடை விதிக்கும் மசோதாவுக்கு, மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி,
குழந்தைப்பேறு இல்லாத தம்பதியருக்கு சில பெண்கள் வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்று தருகிறார்கள். சிலர் பணத்துக்காகவே இந்த பணியை செய்து தருவதாக புகார்கள் எழுந்தன.
எனவே, வணிகரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு தடை விதிப்பதற்கான வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும் என்று இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. இதனால், மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

Related Tags :
Next Story