ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 9.64 கோடி கழிப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன -நிர்மலா சீதாராமன்


ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 9.64 கோடி கழிப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன -நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 5 July 2019 12:25 PM IST (Updated: 5 July 2019 12:25 PM IST)
t-max-icont-min-icon

ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் அக்டோபர் 2 2014 முதல் 9.6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுடெல்லி

மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து பட்ஜெட் உரை தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்  உரையை வாசிக்க தொடங்கினார்.

அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:- 

*  உணவுத்துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாறியதற்கு காரணம் இந்திய விவசாயிகள்.

* பாரம்பரிய தொழில்களை அதிக கிராம மக்கள் மேற்கொண்டு வருவதால் அதை மேம்படுத்த நாடு முழுக்க காதி, தேன், மூங்கில் கிளஸ்டர்கள் அமைக்கப்படும். 2019-20ம் ஆண்டில் 100 கிளஸ்டர்கள் நாடு முழுக்க அமைக்கப்படும்.

*  1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* 1.95 கோடி வீடுகள் 2022-ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் வீடற்றவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும்.

* 2024-ம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு. இதற்காக, கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

* அக்டோபர் 2014 முதல் 9.6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.  5.6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை. இந்த வெற்றியை நாம் மேலும் கட்டியெழுப்ப வேண்டும். ஒவ்வொரு  கிராமத்திலும் நிலையான விற்பனை கழிவு நிர்வாகத்தை மேற்கொள்ள ஸ்வச் பாரத் பணியை விரிவுபடுத்த நான் முன்மொழிகிறேன்.

* அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும்.

* ரயில், பஸ் என எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும்.

* தேசிய பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றமே இலக்கு.

* எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படும்.

* மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு.

* மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர், ரெயில்வே துறையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். 2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* அடுத்த 12 ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

Next Story