தேசிய செய்திகள்

வேலைவாய்ப்புகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் -பிரதமர் மோடி பெருமிதம் + "||" + PM Narendra Modi The budget for a New India has a roadmap to transform the agriculture sector of the country

வேலைவாய்ப்புகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் -பிரதமர் மோடி பெருமிதம்

வேலைவாய்ப்புகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் -பிரதமர் மோடி பெருமிதம்
மத்திய பட்ஜெட் வேலைவாய்ப்புகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

மத்திய பட்ஜெட் நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டாகவும், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாகவும் உள்ளது. பட்ஜெட் குறித்து பெருமையடைகிறேன். ஏழைகளுக்கான பட்ஜெட் இது.  இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் திட்டங்கள் மற்றும்  கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளன.

5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக, நாட்டை உருவாக்கிடும் முதல் படியாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. 

இந்தியாவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. புதிய இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். 

21 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். நடுத்தர மக்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி  முறை மேலும் எளிமைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வரி விதிப்பு முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

கடனில் வாங்கப்படும் மின்சார வாகனங்களுக்கு, ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

எலக்ட்ரிக், பேட்டரி என சுற்றுச்சூழல் பாதுகாக்கும் அம்சங்கள் கொண்ட பசுமையான பட்ஜெட் இது. எதிர்காலத்திற்கான பட்ஜெட்டை அளித்துள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுகள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு நிறுத்தம்: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு கர்நாடகம் மீது கோபம் ஏன்? சித்தராமையா கேள்வி
மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி இருப்பதாக கூறிய சித்தராமையா, கர்நாடகம் மீது பிரதமர் மோடி, அமித்ஷா ஜோடிக்கு இவ்வளவு கோபம் ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2. பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்தித்தார்.
3. பெங்களூரு சர்ச்தெருவில் சுவர்கள், கடை ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான வாசகங்கள்
பெங்களூரு சர்ச்தெருவில் உள்ள சுவர்கள், கடைகளின் ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. பிரதமர் மோடியுடன் நாராயணசாமி சந்திப்பு: கவர்னர் கிரண்பெடியை மாற்ற வலியுறுத்தல்
பிரதமர் மோடியை நாராயணசாமி நேரில் சந்தித்தார். அப்போது அவர் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை மாற்ற வலியுறுத்தியதாக கூறினார்.
5. பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார்
பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.