2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்.):- இது, புதிய மொந்தையில் பழைய கள். பழைய வாக்குறுதிகளையே மீண்டும் அளித்துள்ளனர்.
ப.சிதம்பரம் (காங்.):- சாமானியர்களின் குரலையோ, பொருளாதார நிபுணர்களின் குரலையோ கேட்காமல் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாய், மொத்த செலவினம் போன்ற எதையும் தெரிவிக்காத பட்ஜெட் உரையாக உள்ளது. நூறு நாள் வேலை திட்டம் போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் கூறவில்லை. பட்ஜெட் உரை, வழக்கத்துக்கு மாறான, பயனற்ற செயல்பாடாக இருக்கிறது.
அபிஷேக் சிங்வி (காங்.):- மோடியின் மனம், வலதுசாரிகொள்கை பக்கம்தான் இருக்கிறதே தவிர, பொருளாதாரம் பக்கம் இல்லை.
அருண் ஜெட்லி (பா.ஜ.):- வளர்ச்சியை ஊக்குவிக்கும், அனைத்துதரப்பினருக்கும் உகந்த கொள்கை ஆவணமாக பட்ஜெட் திகழ்கிறது.
சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.):- நாட்டின் முன்எப்போதும் இல்லாத வளர்ச்சிக்கு பங்களிக்கப் போகும் பட்ஜெட். பிரதமருக்கும், நிதி மந்திரிக்கும் வாழ்த்துகள்.
யோகி ஆதித்யநாத் (பா.ஜ.):- நாட்டை உலக வல்லரசாக ஆக்குவதற்கான பாதையில் இட்டுச்செல்லக்கூடிய நல்ல பட்ஜெட்.
நிதிஷ்குமார் (ஐ.ஜனதாதளம்):- 500 கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியாவை தரம் உயர்த்துவதை நோக்கமாக கொண்ட பட்ஜெட் பாராட்டுக்குரியது. ‘ஹர்கார் ஜல்’ திட்டத்தை வரவேற்கிறேன்.
மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்):- தொலைநோக்கு பார்வை சிறிதும் இல்லாத பட்ஜெட். இதனால் சாமானிய மக்களின் துயரம் மேலும் அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால், எல்லா பொருட்களின் விலையும் உயரும்.
ராப்ரிதேவி (ராஷ்டிரீய ஜனதாதளம்):- பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அறிவிக்கப்படாததால், பீகார் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
ராகவ் சதா (ஆம் ஆத்மி):- நாட்டின் பெரிய பொருளாதார சவால்களுக்கு பட்ஜெட் எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜ.):- இன்றைய பட்ஜெட் மூலம் அனைத்துதரப்பு மக்களும் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு வீடு, குடிநீர், மின்சாரம் ஆகியவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக மகளிரின் வாழ்க்கையில் ஒரு அங்கமான தங்கம் விலை ஏற்றத்தை குறைக்க அதன் மீதான வரியை குறைக்குமாறு தமிழக மகளிரின் சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம்.
கே.எஸ்.அழகிரி (காங்.):- வாக்களித்த மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகிற நிதிநிலை அறிக்கையாகும். யாருக்கும் பயன்தராத வகையில் அமைந்திருந்திருக்கிறது. பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியவை ஆகும். மொத்தத்தில் வளர்ச்சி என்ற போர்வை போர்த்தி மூடப்பட்டிருந்தாலும், இந்த பட்ஜெட்டில் வரிச்சுமை சற்று அதிகமாகவே உள்ளது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்ட, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம், வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சம் போன்றவை தொடரும் என்பது, ஜி.எஸ்.டி. வரி குறைப்பு போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.
எரிவாயு திட்டங்கள் மூலம் இந்திய அரசுக்கு வருவாய் திரட்ட முடியும் என்று கூறுவது தமிழ்நாட்டுக்கு பெரும் கேடு ஆகும்.
கனிமொழி (தி.மு.க.):- மத்திய பட்ஜெட்டில் எந்த தெளிவான அறிவிப்புகளும் இல்லை. சாமானிய மக்களுக்கு எந்த அறிவிப்புகளும் கிடையாது. நிறைவேற்றி இருப்பதாக மத்திய அரசு சொல்லக்கூடிய பல சாதனைகள் தேடக்கூடிய அளவுக்குத்தான் இருக்கின்றன.
திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்):- வெகுமக்களுக்கு விரோதமான பட்ஜெட்டாக இருக்கிறது.
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு):- இந்தியாவின் இன்றைய பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்கிற பட்ஜெட்டாக இல்லை. மாறாக, வார்த்தை ஜாலம் மூலம் மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக இருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:- விவசாயம் மற்றும் தொழில்துறையை வளர்த்தெடுக்கவோ, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கவோ உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை. மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை என்பதே நிதர்சனமான உண்மை.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:- ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி, ஒரே மின்சாரம், ஒரே ரேஷன், ஒரே கலாசாரம் என்ற அணுகுமுறையை தீவிரமாக அமலாக்கி மாநில உரிமைகளை பறிக்கும் செயலுக்கு நிதிநிலை அறிக்கை(பட்ஜெட்) பச்சைக் கொடி காட்டுகிறது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- நாடு முழுவதும் உள்ள மாநில மக்களும், நாடும் வளர்ச்சி பெறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பொது பட்ஜெட்டும், ரெயில்வே பட்ஜெட்டும் அமைந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- ‘புதிய இந்தியா’ என்ற கனவு வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லி, அதற்காக புதுப்புது பெயர்களில் திட்டங்களை மட்டும் அறிவித்துவிட்டால் புதிய இந்தியா பிறந்துவிடும் என்று இந்த அரசு நினைப்பது வெறும் பகல் கனவாகவே இருந்துவிடுமோ? என்ற கவலையையும், அச்சத்தையும் மத்திய பட்ஜெட் மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
ச.ம.க. தலைவர் ஆர்.சரத்குமார்:- தேசிய பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் என்பதே இலக்கு என்பதை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டின் மூலம் வலியுறுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.

Related Tags :
Next Story