காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.
2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள்.
அவ்வரிசையில் கட்சியில் இளம் தலைவர்களில் முக்கியமானவரான ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தியிடம் வழங்கியுள்ளார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பை ஏற்கிறேன். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ராகுல் காந்தியிடம் சமர்ப்பித்தேன். இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காகவும், எங்கள் கட்சிக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தமைக்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார் ஜோதிராதித்ய சிந்தியா.
Related Tags :
Next Story