உத்தரபிரதேசத்தில் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓட்டம் ஒருவர் ரெயிலில் அடிபட்டு சாவு


உத்தரபிரதேசத்தில் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓட்டம் ஒருவர் ரெயிலில் அடிபட்டு சாவு
x
தினத்தந்தி 8 July 2019 3:06 AM IST (Updated: 8 July 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓட்டம். இரும்பு கம்பிகளை பயன்படுத்தியும், சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறியும், காம்பவுண்டு சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடினர்.

இடாவா,

உத்தரபிரதேசத்தின் இடாவா மாவட்ட சிறையில், வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற ராமானந்த் (வயது 45), சந்திர பிரகாஷ் என்ற 2 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் நேற்று அதிகாலையில் இரும்பு கம்பிகளை பயன்படுத்தியும், சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறியும், காம்பவுண்டு சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் சுமார் ஒரு மணி நேரத்துக்குப்பிறகே சிறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. உடனே அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதற்கிடையே சிறைக்கு அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் ஒருவரின் பிணம் கிடப்பதை ரெயில்வே போலீசார் கண்டுபிடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று பார்த்த சிறை அதிகாரிகள், அங்கு இறந்து கிடந்தது ராமானந்த் என்பதை உறுதி செய்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், அந்த வழியாக சென்ற ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அவரது பிணத்தை கைப்பற்றிய அதிகாரிகள், தப்பி ஓடிய மற்ற கைதியான சந்திர பிரகாஷை தேடி வருகின்றனர்.

Next Story