உத்தர பிரதேசத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்தது; 29 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்ததில் 29 பேர் பலியாகி உள்ளனர்.
ஆக்ரா,
உத்தர பிரதேசத்தில் ஆக்ரா நகரில் ஆவாத் டெப்போவில் இருந்து இரண்டடுக்கு கொண்ட பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்து லக்னோ நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி சென்று கொண்டு இருந்தது.
பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், யமுனா எக்ஸ்பிரஸ் வழிச்சாலையில் கால்வாய் ஒன்றில் இன்று காலை பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 29 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளை தொடங்கினர். உத்தர பிரதேச முதல் மந்திரி ஆதித்யநாத், பயணிகள் உயிரிழந்ததற்கு தனது வருத்தத்தினையும், இரங்கல்களையும் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தோருக்கு அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார்.
உத்தர பிரதேச சாலை போக்குவரத்து கழகம் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story