வரலாறு படைத்து விட்டார்; நிர்மலா சீதாராமனுக்கு சசிதரூர் பாராட்டு


வரலாறு படைத்து விட்டார்; நிர்மலா சீதாராமனுக்கு சசிதரூர் பாராட்டு
x
தினத்தந்தி 9 July 2019 7:49 AM IST (Updated: 9 July 2019 7:49 AM IST)
t-max-icont-min-icon

வரலாறு படைத்து விட்டார் என நிர்மலா சீதாராமனுக்கு சசிதரூர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதம் எடுத்து கொள்ளப்பட்டது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:– இந்திரா காந்திக்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த 2–வது பெண்மணியாக மீண்டும் வரலாறு படைத்து விட்டார், நிர்மலா சீதாராமன். இதற்காக எனது கட்சி சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். சபைக்கு தமிழ் பாடலை கொண்டு வந்து அற்புதமான பிணைப்பை உண்டாக்கி விட்டார்.

அதே சமயத்தில், இந்த பட்ஜெட் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் ஒரு ‘திரிசங்கு‘ பட்ஜெட்டாக உள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

Next Story