பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்


பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
x
தினத்தந்தி 9 July 2019 8:11 AM IST (Updated: 9 July 2019 8:11 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி, 


பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த வரி உயர்வுக்கு நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர் பேசியதாவது:–

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து வரும்போது, இந்தியாவில் அவற்றின் விலையை உயர்த்தியது தவறு. சாமானியர்கள் ஏற்கனவே மற்ற நாட்டினரை விட அதிக விலை கொடுத்து வருகிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

டி.ஆர்.பாலு (தி.மு.க.) பேசியபோது, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Next Story