சந்திரன் எங்கிருந்து வந்தது? இஸ்ரோவின் புதிரான ட்வீட்


சந்திரன் எங்கிருந்து வந்தது? இஸ்ரோவின் புதிரான ட்வீட்
x
தினத்தந்தி 10 July 2019 6:41 AM GMT (Updated: 10 July 2019 7:37 AM GMT)

சந்திரன் எங்கிருந்து வந்தது? சந்திராயன் 2 அறிமுகத்திற்கு முன்னதாக இஸ்ரோ புதிரான ட்வீட் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

சென்னை,

சந்திராயன்-2  விண்கலம் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன்-2 விண்கலம் 3,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும். சந்திராயன்- 2 விண்கலம்  சந்திரனின் தென் துருவப் பகுதிக்குச் செல்லும், இதற்கு முன்னர் எந்த நாடும் அந்த பகுதிக்கு சென்றதில்லை.

இந்தியா  சந்திராயன் 2 ஐ அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) உலகின் மிகவும் குழப்பமான அறிவியல் விவாதங்களில் ஒன்றான சந்திரன் தோற்றம் குறித்து  ட்வீட் வெளியிட்டு உள்ளது.

"சந்திரன் எங்கிருந்து வந்தது?" என்று இஸ்ரோ ஒரு படத்துடன் ட்வீட் செய்து உள்ளது  சந்திரனின் தோற்றத்திற்கு பின்னால் இருக்கும் நான்கு கோட்பாடுகளை விளக்கி உள்ளது.

1. பிளவு கோட்பாடு

பூமியின் சுழற்சி வேகம் காரணமாக  சந்திரன் பூமியில் பிளவுபட்டு  பிரிய காரணமாக அமைந்தது. அதே நேரத்தில் அதன் ஈர்ப்பு விசையானது இந்த பகுதியை நங்கூரமிட்டு நமது இயற்கை செயற்கோளாக  மாறியது.

2. ராட்சத தாக்க கருதுகோள்

பூமிக்கும் மற்றொருவான வான் பொருளுக்கும்,  இடையிலான மோதலின் போது  கிரகத்தின் ஒரு பகுதி உடைந்து சந்திரனாக மாறியது.

3. இணை கூட்டல் கோட்பாடு

ஒரு ஒற்றை துளை வாயு ஒரு கருந்துளையைச் சுற்றும் போது சந்திரனையும் பூமியையும் உருவாக்கியது.

4. பிடிப்பு கோட்பாடு

பறக்கும்போது பூமியின் ஈர்ப்பு விசையால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு சந்திரன் ஒரு இணைக்கப்படாத பொருளாக இருந்தது.

இந்த நான்கு கோட்பாடுகளையும்  வெளியிட்டு உள்ள இஸ்ரோ இந்த கோட்பாடுகளில் எது சரியானது என  கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் "வேறு யாரும் கருத்தில் கொள்ளாத ஐந்தாவது மாற்று  கோட்பாடு இருக்கிறதா?" என கேள்வி எழுப்பி உள்ளது.


Next Story