தேசிய செய்திகள்

செயற்கை இதயம் பொருத்திய 18 மாதங்கள் கழித்து மீண்டும் செயல்பட்ட உண்மையான இதயம் டெல்லி ஆஸ்பத்திரியில் அதிசயம் + "||" + Artificial Heart Fitted 18 months later The real heart that acted again

செயற்கை இதயம் பொருத்திய 18 மாதங்கள் கழித்து மீண்டும் செயல்பட்ட உண்மையான இதயம் டெல்லி ஆஸ்பத்திரியில் அதிசயம்

செயற்கை இதயம் பொருத்திய 18 மாதங்கள் கழித்து மீண்டும் செயல்பட்ட உண்மையான இதயம் டெல்லி ஆஸ்பத்திரியில் அதிசயம்
ஈராக் நாட்டை சேர்ந்த வியாபாரி ஹனி ஜாவத் முகம்மது (வயது 52) என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இதயம் பலவீனமடைந்து டெல்லியில் உள்ள ஒரு இதய சிகிச்சை மையத்துக்கு வந்தார்.

புதுடெல்லி, 

ஈராக் நாட்டை சேர்ந்த வியாபாரி ஹனி ஜாவத் முகம்மது (வயது 52) என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இதயம் பலவீனமடைந்து டெல்லியில் உள்ள ஒரு இதய சிகிச்சை மையத்துக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர் அஜய் கவுல், இதயம் செயலிந்து வருவதால் மாற்று இதயம் பொருத்த வேண்டும் அல்லது செயற்கை இதயம் பொருத்த வேண்டும் என்றார். மாற்று இதயம் கிடைக்க தாமதமானதால் அவருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரை தொடர்ந்து பரிசோதனை செய்ததில் செயற்கை இதயம் செயல்பட்டு வந்தது. உண்மையான இதயம் செயலிழந்து ஓய்வில் இருந்தது. ஆனால் 3 மாதம் கழித்து இந்த முறை பரிசோதனைக்கு வந்தபோது, அதிசயிக்கத்தக்க வகையில் அவரது உண்மையான இதயம் இயல்பாக செயல்பட்டது. சந்தேகம் அடைந்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் உண்மையான இதயம் நன்றாக செயல்பட்டு, செயற்கை இதயத்தின் செயல்பாட்டை குறைத்து இருந்தது தெரிந்தது.

வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் உண்மையான இதயம் 10 முதல் 15 சதவீதம் தான் குணமாகும். ஆனால் இவரது இதயம் மிக நன்றாக செயல்பட்டது. இதனை உறுதி செய்த பின்னர், அவரது செயற்கை இதயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் புதிய தொழில்நுட்பத்தில் அகற்றிவிட்டோம். இப்போது அவரது இதயம் எந்த உதவியும் இல்லாமல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர் கவுல் தெரிவித்தார்.

‘‘இது எனக்கு மறுபிறப்பு’’ என்று ஹனி தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு: தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட ஊசி மருந்தை திருப்பி அனுப்ப உத்தரவு
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு போடப்பட்ட ஊசியால் குளிர்காய்ச்சல் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்ட ஊசி மருந்தை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
2. ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது
ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
3. மயிலாப்பூரில் ஆஸ்பத்திரி, கடைகளில் ரூ.4½ லட்சம் திருடிய வாலிபர் கைது
மயிலாப்பூரில் ஆஸ்பத்திரி மற்றும் கடைகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. திருப்பத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
திருப்பத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.