தேசிய செய்திகள்

வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: வெங்கையா நாயுடுவிடம் சசிகலா புஷ்பா மனு + "||" + For Vaiko Not to be sworn in To Venkayya Naidu Sasikala Pushpa petition

வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: வெங்கையா நாயுடுவிடம் சசிகலா புஷ்பா மனு

வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: வெங்கையா நாயுடுவிடம் சசிகலா புஷ்பா மனு
பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மனு அளித்துள்ளார்.
புதுடெல்லி,

2009-ல் திமுக ஆட்சிக் காலத்தில் வைகோ மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதனால் வைகோ ராஜ்யசபா எம்.பி. ஆவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். 23 ஆண்டுகளுக்குப்பின் வைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைகிறார்.

இந்நிலையில்  சசிகலா புஷ்பா எம்.பி. ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில், தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடியை தமிழர் விரோதியாக தொடர்ந்து சித்தரித்து வருகிறார் வைகோ என்றும் சசிகலா புஷ்பா அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குரூப்-2 தேர்வில் தனி பகுதியாக இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி -வைகோ
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வில் தனி பகுதியாக இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்று வைகோ தெரிவித்துள்ளார்.
2. கோவில்களுக்கு செல்லும் விசுவாசிகளை கேலி செய்யாதீர்கள்; திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டும் -வைகோ
கோவில்களுக்கு செல்லும் விசுவாசிகளை கேலி செய்யாதீர்கள், திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டும் என வைகோ பேசினார்.
3. பரூக் அப்துல்லாவுக்கு வீட்டுகாவல்: சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்காக வைகோ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
4. காஷ்மீர் விவகாரம்: காங்கிரசை விட பாஜகவைத் தான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கிப் பேசியிருக்கிறேன்-வைகோ
காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை விட பாஜகவைத் தான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கிப் பேசியிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
5. வைகோவுடன் புகைப்படம் எடுப்போர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்; ம.தி.மு.க.
வைகோவுடன் புகைப்படம் எடுக்க விரும்புவோர் இனி ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என ம.தி.மு.க. தெரிவித்துள்ளது.