உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது: ராகுல் காந்திக்கு ராபர்ட் வத்ரா பாராட்டு
உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயம் உள்ளது என்று ராகுல் காந்திக்கு ராபர்ட் வத்ரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மக்களவை தேர்தலில் சந்தித்த படுதோல்வியை அடுத்து, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வத்ரா, ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். ராபர்ட் வத்ரா பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:- “
ராகுல் காந்தியிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் இருக்கும் 45 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மட்டுமின்றி மற்ற இளம் தலைவர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக வருகிறீர்கள். கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவதற்காக நீங்கள் எடுத்துள்ள முடிவு அனைவராலும் பாராட்டப்படுகிறது.”இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story