ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க, செப்டம்பர் மாதம் நியூயார்க் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு செல்கிறார்.
புதுடெல்லி,
செப்டம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் ஹூஸ்டன் நகரங்களுக்கு செல்ல உள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் அழைப்பு விடுத்ததன் பேரில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளார். ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நியூயார்க் நகரில் செப்டம்பர் 20 துவங்கி செப்டம்பர் 23 வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஹூஸ்டன் செல்லும் மோடி, டெக்சாஸ் நகரைச் சேர்ந்த இந்திய - அமெரிக்க சமூகத்தினரை சந்திக்க உள்ளார். வாஷிங்டன் நகருக்கு மோடி செல்வது இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் ஐ.நா. கூட்டத்தின் ஒரு அங்கமாக அமெரிக்க அதிபர் டிரம்பையும் உலக தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story