வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் இறுதி விசாரணை


வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் இறுதி விசாரணை
x
தினத்தந்தி 15 July 2019 9:55 AM GMT (Updated: 15 July 2019 9:55 AM GMT)

வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோட்டில் இறுதி விசாரணை நடக்கிறது.

புதுடெல்லி,

சட்டசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் ஒரு தொகுதிக்கு மேலாக இருதொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். ஒரு தொகுதியில் வெற்றிப்பெற்றால்  எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. ஆகிவிடுகிறார்கள். இரண்டு தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றால் ஒரு தொகுதியில் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வார்கள். இதனால் அங்கு மீண்டும் தேர்தல் நடைபெறும். இந்நிலையில்  வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதற்கு தேர்தல் ஆணையமும் ஆதரவு தெரிவித்தது. இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஆகஸ்ட் மாதம் இறுதி விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story