ரூ.400 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு - கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது


ரூ.400 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு - கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
x
தினத்தந்தி 17 July 2019 3:15 AM IST (Updated: 17 July 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.400 கோடி வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு,

பெங்களூருவில் பொதுமக்களிடம் இருந்து ரூ.1,640 கோடி வசூலித்து மோசடி செய்து விட்டு நகைக்கடை அதிபர் மன்சூர்கான் என்பவர் துபாய்க்கு தப்பி சென்று தலைமறைவாகி விட்டார். இதற்கிடையே இவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், கர்நாடக மாநிலம் சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க், தன்னிடம் ரூ.400 கோடி வாங்கி விட்டு திருப்பி தர மறுப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இதனை எம்.எல்.ஏ. மறுத்தார்.

இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பு விசாரணை குழு போலீசார் நோட்டீஸ் அனுப்பினார்கள். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் பெங்களுரு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். 13 மணி நேர விசாரணைக்கு பின்னர், அவர் விடுவிக்கப்பட்டார். கூட்டணி அரசின் மீதான அதிருப்தியால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள ரோஷன் பெய்க், மும்பையில் தங்கியுள்ள மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது.


Next Story