உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 16 July 2019 10:18 PM GMT (Updated: 16 July 2019 10:18 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரும் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்க உள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஈரோட்டை சேர்ந்த ராதாமணி பாரதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று (புதன்கிழமை) ஏற்கனவே பட்டியல் இடப்பட்டுள்ள தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குடன் இந்த மனுவும் இணைத்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story