பீகாரில் கால்நடைகள் திருட முயற்சி சந்தேகத்தின் பேரில் 3 பேர் அடித்துக்கொலை


பீகாரில் கால்நடைகள் திருட முயற்சி சந்தேகத்தின் பேரில் 3 பேர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 19 July 2019 11:55 AM GMT (Updated: 19 July 2019 11:55 AM GMT)

பீகாரில் கால்நடைகள் திருட முயற்சி என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை மூன்று பேர்  கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டனர். அவர்கள் கால்நடைகளை திருட முயற்சித்ததாகவும், அப்போது பொதுமக்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிகாலையில் பனியாபூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பைகம்பர்பூர் கிராமத்தில் நடந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story