திருப்பதிக்கு ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் - தகவல்


திருப்பதிக்கு ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் - தகவல்
x
தினத்தந்தி 20 July 2019 10:40 AM GMT (Updated: 20 July 2019 10:40 AM GMT)

ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் வழங்கும் திட்டம் திருப்பதியில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதராபாத்,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.

திருமலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எல் 1 , எல் 2 , எல் 3 ஆகிய முக்கிய பிரமுகர்களுக்கான  விஐபி தரிசனம் முறையின் மூலம் முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவித்தார். 

பக்தர்களுக்கு மனநிலையை பாதிக்கும் வகையில் உள்ள மூன்று ரகமான தரிசன முறையை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் அவர்களுக்கு உண்டான தகுதியின்படி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தினந்தோறும் 3 மணி நேரத்திற்கு மேல் விஐபி தரிசனம் நடைபெற்றது எனவும்  விஐபிகளுக்கு ஒதுக்கக்கூடிய நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் பேர் வரை பொது தரிசனத்தில் சுவாமியை தரிசிக்கலாம் எனவும் சுப்பாரெட்டி  கூறினார்.

இந்நிலையில், தற்போது கொண்டு வரப்பட உள்ள புதிய திட்டத்தை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் துவங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைத்து வருகிறது புதிதாக துவங்கப்பட்ட ஸ்ரீவாணி டிரஸ்ட். The Sri Venkateswara Alaya Nirmanam trust (Srivani trust) இந்த டிரஸ்டிற்கு ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் என்பது தான் இந்த புதிய முறை. 

சாமானிய பக்தர்களின் மீது கவனம் செலுத்துவதற்காகவும், ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையை அதிகரிக்க செய்யவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story