உத்தரபிரதேசத்தில் அசம்கான் மகன் கைது


உத்தரபிரதேசத்தில் அசம்கான் மகன் கைது
x
தினத்தந்தி 1 Aug 2019 2:00 AM IST (Updated: 1 Aug 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.யான அசம்கானின் மகன் கைது செய்யப்பட்டார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. அசம்கானுக்கு சொந்தமான பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் மதரசாவில் திருடப்பட்ட அரியவகை புத்தகங்கள் வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது.

இதனையடுத்து போலீசாரும், அதிகாரிகளும் பல்கலைக்கழகத்திற்குள் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். அப்போது பல்கலைக்கழகத்தில் 50 பெட்டிகளில் இருந்த 2,500 அரியவகை புத்தகங்களை போலீசார் கைப்பற்றினர்.

இதற்கிடையே தங்களது பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அசம்கானின் மகனும், சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வுமான அப்துல்லா அதிகாரிகளை தடுத்து நிறுத்தினார். எனவே அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவரை போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு சமாஜ்வாடி கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கட்சியினர் மீது பொய் வழக்கு போடப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.


Next Story