திரிபுராவில் பா.ஜனதா அமோக வெற்றி - வாக்காளர்களுக்கு மோடி நன்றி
திரிபுராவில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
அகர்தலா,
பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுரா மாநிலத்தில் மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. 85 சதவீத இடங்களை பா.ஜனதா போட்டியின்றி கைப்பற்றியது. தேர்தல் நடந்த மீதி இடங்களில், 97 சதவீத இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதற்காக பிரதமர் மோடி, திரிபுரா மாநில வாக்காளர்களுக்கும், பா.ஜனதா நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதில், “திரிபுராவில் மீண்டும், மீண்டும் பா.ஜனதா வெற்றி பெறுவது, வளர்ச்சி அரசியலின் வலிமையை காட்டுகிறது. சரியான உணர்வுடன் செயல்பட்டால், எல்லாமே சாத்தியம்தான்” என்று அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story