ஈரான் சிறை பிடித்த 18 இந்தியர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்; வெளியுறவு துறை மந்திரி


ஈரான் சிறை பிடித்த 18 இந்தியர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்; வெளியுறவு துறை மந்திரி
x
தினத்தந்தி 3 Aug 2019 12:20 PM GMT (Updated: 3 Aug 2019 12:20 PM GMT)

ஈரான் சிறை பிடித்த 18 இந்தியர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஸ்டெனா இம்பீரோ என்ற கப்பலில் ஆதித்ய வாசுதேவன் என்ற தமிழக மாலுமி உள்பட 18 இந்தியர்கள் சென்றனர்.  கடந்த மாதம் 19ந்தேதி அவர்கள் சென்ற கப்பலை, ஈரான் அருகேயுள்ள ஹார்மோஸ் நீரிணை பகுதியில், அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சிறைபிடித்தனர்.

இதனை அடுத்து தமிழக மாலுமி உள்பட இந்தியர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் இன்று எழுதினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளியுறவு துறை மந்திரி, ஈரானால் பிடிக்கப்பட்டுள்ள 18 இந்தியர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.  தொடர்ந்து ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

Next Story