குழப்பமான சூழ்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி 10-ந் தேதி கூடுகிறது - புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?
குழப்பமான சூழ்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி 10-ந் தேதி கூடுகிறது. இதில் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சோதனையாக அமைந்து விட்டது. அந்தக் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, முக்கிய எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தொடர்ந்து 2-வது முறையாக பெற முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான அமேதியை தக்க வைக்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றது மட்டுமே அவருக்கு ஆறுதலாக அமைந்தது.
இப்படி ஒரு மோசமான தோல்வி ஏற்பட்டதின் பின்னணிதான் என்ன என்று ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பான காரிய கமிட்டி டெல்லியில் மே மாதம் 25-ந் தேதி கூடியது.
அதில் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். காரிய கமிட்டி அவரது முடிவை ஏற்காவிட்டாலும், அவர் “நான் விலகியது, விலகியதுதான். புதிய தலைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். எங்கள் (காந்தி) குடும்பத்தில் இருந்து யாரும் அந்தப் பொறுப்புக்கு வர மாட்டோம்” என கூறி விட்டார். அவரை சமாதானப்படுத்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் முயற்சித்தனர். ஆனால் அவர் தனது முடிவில் உடும்புப்பிடி பிடித்து வருகிறார்.
அதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, மல்லிகார்ஜூன கார்கே, சுஷில் குமார் ஷிண்டே உள்ளிட்ட பலரது பெயர்கள் தலைவர் பதவிக்கு அடிபட்டாலும் அதில் தெளிவு ஏற்படவில்லை.
ஒரு கட்டத்தில் பிரியங்காவை தலைவர் பதவிக்கு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் முன்னிலைப் படுத்தினர். இதனால் அவர் தலைவர் ஆவாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் இப்போது அவரும் தலைமை பொறுப்புக்கு வர விரும்ப வில்லை என கூறப்படுகிறது.
மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியில் குழப்பமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. மிகப்பழமையான காங்கிரஸ் கட்சி தலைவர் இன்றி 3 மாதங்களைக் கடந்து விட்டது. இது கட்சி தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தி வருகிறது.
மிகப்பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அதற்கு ஈடுகொடுக்கிற விதத்தில் கட்சியின் முன்னணி தலைவர்களை வழிநடத்தவோ, நாடாளுமன்றத்தில் கட்சியின் நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்து வைக்க ஏற்ற வகையில் எம்.பி.க்களை முடுக்கி விடவோ தலைமையின்றி கட்சி தத்தளித்து வருகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என கடந்த சில தினங்களுக்கு முன்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சுர்ஜிவாலா கூறினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் புதன்கிழமை முடிகிறது.
இந்த நிலையில் காரிய கமிட்டி கூட்டம் வருகிற 10-ந் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. இதை கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டுவிட்டரில் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காரிய கமிட்டி உறுப்பினர்களான அகமது பட்டேல், ஏ.கே. அந்தோணி, ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத், ஹரிஷ் ராவத், செல்ஜா, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோரும், நிரந்தர அழைப்பாளர்களான ப, சிதம்பரம், மீரா குமார், டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்டவர்களும், சிறப்பு அழைப்பாளர்களான ஜிதின் பிரசாதா, தீபிந்தர்சிங் ஹூடா உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
அப்படி இல்லாத சூழலில் இடைக்கால தலைவராக ஒருவரை நியமித்து கட்சி நிர்வாகிகளை தேர்தல் மூலம் தேர்வு செய்கிற வாய்ப்பும் இருப்பதாக தெரிய வருகிறது.
எப்படி இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் நிலவி வருகிற குழப்பமான சூழல் முடிவுக்கு வந்தால்போதும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது.

Related Tags :
Next Story