காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து: ‘தைரியமான, வரலாற்று முடிவு’ சுஷ்மா சுவராஜ்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தைரியமான மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த முடிவு என சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கான மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நகர்வு தொடர்பாக பாராட்டுகளும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது. மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவிக்கையில், தைரியமான மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த முடிவு என கூறியுள்ளார்.
"ஒரு தைரியமான மற்றும் வரலாற்று முடிவு. நம்முடைய கிரேட் இந்தியாவுக்கு - ஒரே இந்தியாவுக்கு வணக்கம் செலுத்துவோம் ” என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story