ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் - அமித்ஷா உறுதி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பியதும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அமித்ஷா அறிவித்துள்ளார்.
370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதுதொடர்பான மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்ற போது, சில அரசியல் கட்சிகள் அரசமைப்புச்சட்டம் 370 பிரிவை நீக்க ஆதரவு தெரிவித்து, ஆனால் மாநில அந்தஸ்தை பறிப்பதை கடுமையாக எதிர்த்தன. விவாதம் முடிந்ததும் அமித்ஷா பதிலளித்து பேசுகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பியதும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
அமித்ஷா பேசுகையில், விவாதத்தின் போது பல்வேறு எம்.பி.க்கள் ஜம்மு காஷ்மீர் எவ்வளவு நாட்களுக்கு யூனியன் பிரதேசமாக செயல்படும் என்று கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு அங்கு இயல்பு நிலை திரும்பியதுமே மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். சரியான நேரத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அந்தஸை மீண்டும் காஷ்மீருக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இதற்கு சிறிது காலம் பிடிக்கும். கண்டிப்பாக ஜம்மு காஷ்மீர் ஒருநாள் மாநிலமாகும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story