தேசிய செய்திகள்

உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - அமித்ஷா ஆவேசம் + "||" + We will die for Kashmir says Amit Shah during Lok Sabha debate

உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - அமித்ஷா ஆவேசம்

உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - அமித்ஷா ஆவேசம்
உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக பேசினார்.
புதுடெல்லி

கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியது. நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் அமித்ஷா காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் மறுசீரமைப்புக்கு ஆதரவாக 125 பேரும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர். 

மக்களவையில் அமித்ஷா பேசியதாவது:-

காஷ்மீர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது . ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே; காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட காங்கிரஸ்  விரும்புகிறதா? ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மாற்ற முடியாது; இது அரசியல் ரீதியான நகர்வு அல்ல. சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் முடிவெடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என கூறினார்.

மக்களவையில்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது அனைத்து விதிகளையும் மீறி காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் மீறியுள்ளார். மக்களவையில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது எனவும் ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரம் நிலுவையில் உள்ளபோது மசோதாவை கொண்டு வந்தது ஏன். காஷ்மீர் உள்நாட்டு விவகாரமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்  எனவும் காங்கிரஸ் மக்களவை குழுத்தலைவர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்தார்.

அறிவிக்கப்படாத அவசர நிலை தற்போது நிலவுகிறது  என திமுக எம்பி  டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டினார்.

அமித்ஷா பேசும் போது கூறியதாவது:-

பிரிந்துள்ள காஷ்மீரை ஒன்றிணைக்கும் முயற்சி இது . பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீர் அக்சை சின், ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவையே. உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் 40 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு
ஜம்மு காஷ்மீரில் 40 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. ஜம்மு காஷ்மீர் எல்லையில் ராணுவத்தினர் அதிகபட்ச உஷார் நிலையில் உள்ளனர் -ராணுவ தலைமை தளபதி
ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடந்து ராணுவத்தினர் அதிகபட்ச உஷார் நிலையில் உள்ளனர் என சென்னையில் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார்.
3. இந்தி மொழி விவகாரம்: எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது - அமித்ஷா விளக்கம்
எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என இந்தி மொழி விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
4. காஷ்மீரில் கடைகளை திறக்க பயங்கரவாதிகள் எதிர்ப்பு
காஷ்மீரில் கடைகளை திறக்க பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
5. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து
சர்வதேச அளவில் நாட்டை அடையாளப்படுத்த இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை மந்திரி அமித்‌ஷா கூறியுள்ளார்.