தேசிய செய்திகள்

“காஷ்மீரை பிரிப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை காக்க முடியாது” - ராகுல் காந்தி கருத்து + "||" + Rahul Gandhi: National integration isn’t furthered by unilaterally tearing apart JK

“காஷ்மீரை பிரிப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை காக்க முடியாது” - ராகுல் காந்தி கருத்து

“காஷ்மீரை பிரிப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை காக்க முடியாது” - ராகுல் காந்தி கருத்து
காஷ்மீரை இரண்டாக பிரிப்பதன் மூலம், தேசிய ஒருமைப்பாட்டை காக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறினார்.
புதுடெல்லி,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதுகுறித்து எல்லா கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராகுல் காந்தி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


இது மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாள் கடந்த நிலையில், நேற்று முதல்முறையாக அவர் கருத்து தெரிவித்தார்.

அவர் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீரை தன்னிச்சையாக பிரிப்பதன் மூலமோ, மக்கள் பிரதிநிதிகளை கைது செய்வதன் மூலமோ, நமது அரசியல் சட்டத்தை மீறுவதன் மூலமோ தேசிய ஒருமைப்பாட்டை காக்க முடியாது.

நாடு என்பது மக்களை கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும். வெறும் நிலங் களை கொண்டு அல்ல.

ஆனால், தனது நிர்வாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, காஷ்மீரை மத்திய அரசு பிரித்துள்ளது. இது, தேச பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி, நேற்று மாலை, டுவிட்டரில் மற்றொரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

காஷ்மீரை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ரகசிய இடங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, ஜன நாயக விரோதமானது.

மேலும், இது ஒரு குறுகிய பார்வை கொண்ட, முட்டாள்தனமான நடவடிக்கை. ஏனென்றால், தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை பயங்கரவாதிகள் நிரப்ப அனுமதித்து விடும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர் கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ப.சிதம்பரம் விவகாரம்: முதுகெலும்பில்லாத ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது - ராகுல் காந்தி பாய்ச்சல்
ப.சிதம்பரம் விவகாரத்தில் முதுகெலும்பில்லாத ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
2. வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பம், வயநாட்டில் அமைக்க வேண்டும் -ராகுல் காந்தி
வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை வயநாட்டில் அமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. கேரளாவுக்கு உதவுவதாக மோடி தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி
கேரளாவுக்கு உதவுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
4. டெல்லியில் இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு - புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகிய நிலையில், இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
5. குழப்பமான சூழ்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி 10-ந் தேதி கூடுகிறது - புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?
குழப்பமான சூழ்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி 10-ந் தேதி கூடுகிறது. இதில் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.