காஷ்மீர் தலைவர்கள் கைது பயங்கரவாதிகளுக்குதான் பயனளிக்கும் - ராகுல் காந்தி
காஷ்மீர் தலைவர்கள் கைது பயங்கரவாதிகளுக்குதான் பயனளிக்கும் என காங்கிரசை சேர்ந்த ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லாவை கைது செய்துள்ளதை அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
காங்கிரசை சேர்ந்த ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், ஜம்மு காஷ்மீரில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ரகசியமான இடங்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது அரசியலமைப்பிற்கு மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. இது குறுகிய பார்வை மற்றும் முட்டாள்தனமான நடவடிக்கையாகும், இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள தலைமைக்கான காலியிடத்தை பயங்கரவாதிகள் நிரப்ப அனுமதிக்கும். சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story