ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு


ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு
x
தினத்தந்தி 6 Aug 2019 5:17 PM IST (Updated: 6 Aug 2019 5:17 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370- ஐ ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா என்பவர் மனுவை தாக்கல் செய்துள்ளார்.  மாநில சட்டசபையில் ஒப்புதல் பெறாமல் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மனுவை அவசர மனுவாக பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நாளை (புதன்கிழமை) முறையிடுவார் எனத் தெரிகிறது. 

Next Story