வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங். கட்சியினர் உதவ வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
கேரளா, கர்நாடகா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையால் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “ கேரளா, கர்நாடகா, மராட்டியம், குஜராத், ஒடிசா, அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உதவி தேவைப்படும் மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும்“ என்று கோரியுள்ளார்.
Related Tags :
Next Story